2019ல் அடியெடுத்து வைக்கும் சிம்ம ராசி நேயர்களே, இந்த வருடம் முக்கிய கிரகங்களான குரு பகவான் 4-ம் வீட்டிலும், சனி பகவான் 5-ம் வீட்டிலும் சஞ்சரித்துள்ளதால் பொருளாதாரத்தில் மந்த நிலை காணப்படும். இந்த புத்தாண்டு உங்களுக்கு எல்லா விதத்திலும் சவாலாகவே இருக்கும். அர்த்தாஷ்டம சனியின் தொல்லையில் இருந்து ஏற்கனவே விடுபட்டதால் இந்த ஆண்டு குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கடந்த ஆண்டு நடக்காமல் இருந்த முக்கிய காரியங்கள் இந்த ஆண்டு நிச்சயம் நடக்கும். எதிர்பார்த்த அளவிற்கு தனலாபம் இல்லையென்றாலும் பொருளாதார ரீதியாக அதிக சிரமம் ஏதும் இருக்காது. எதிர்பார்த்த பணம் கைக்கு வர சிறிது தாமதமாகும். பொருளாதார நிலை சீராக இருந்து வரும். குடும்பப் பொறுப்புகளை முன் வந்து ஏற்றுக்கொள்ளவும். உடன்பிறந்தோர் உங்களுக்கு உதவியாய் இருப்பார்கள். நட்பு வட்டம் விரிவடையும். வேற்று மதத்தவர் கூட நண்பர்கள் ஆவார்கள். குடியிருக்கும் வீட்டினில் நிறைய மாற்றங்களைச் செய்ய நேரிடும். உறவினர்களிடம் இருந்து விலகி நிற்பது நல்லது. உங்கள் வாழ்க்கை தரம் உயரும். உங்கள் மனதிற்கு சரி என பட்டதை உடனே செய்யவும். குடும்பத் நிர்வாகத்தில் உங்கள் திறமை முழுவதும் இந்த ஆண்டு வெளிப்படும். உங்கள் அனுபவ அறிவை பயன்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் வரும். பயணங்களால் அலைச்சல் அதிகமானாலும் கூட அவை அதிர்ஷ்டத்தை தருவதாகவே இருக்கும். புது வீடு கட்டும் பணி தொடரும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் எண்ணம் வரும். எதிரிகளின் இன்னல்கள் குறைந்து ஏற்றமான நிலை உண்டாகும். முக்கிய ரகசியங்களை வெளியில் சொல்லாமல் பார்த்துக்கொள்ளவும். முன் கோபத்தை கட்டுப்படுத்தினால் பல வகையில் நன்மை உண்டாகும். உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படும். அடுத்தவரின் கருத்து, ஆலோசனைக்கு செவி சாய்த்து, அதில் உள்ள நல்ல கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்ளவும். ஏற்கனவே முடிவு செய்த திருமண ஏற்பாடுகள் இந்த வருடம் தொடரும். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். புதிய வீடு, மனை, சொத்து வாங்கும் போது கவனம் தேவை. சனி கிரகத்தின் பார்வை இருப்பதால் தொடர்ந்து வருமானம் வந்து கொண்டே இருக்கும். உத்யோகத்தில் கவனமாக பணியாற்றுவது அவசியம். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்சனை வந்து போகும். தொழில், வியாபாரத்தில் அந்தஸ்து, கௌரவும் உயரும். தொழில், வியாபாரத்தில் விருப்பமானதை செய்ய முடியும். இந்த ஆண்டு பல புதுமைகள் நிறைந்த ஆண்டாக அமையும்.
பரிகாரம் : இந்த வருடம் முழுவதும் சூரிய நமஸ்காரம் மற்றும் சூரிய பகவானை வழிபடவும்
முக்கிய குறிப்பு : இந்த 2019ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831